யாம் அறிந்த செய்திகள், அறிக இவ்வையகம்.

Monday, October 23, 2017

நமது அண்டை மாநிலமான (யூனியன் பிரதேசம்) பாண்டிச்சேரியின் 7வது ஊதியக்குழு ஊதிய அமைப்பு.

SSA--SMC Meeting ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை கூட்டப்பட வேண்டும் மற்றும் SMC MEETING வழிகாட்டு நெறிமுறைகள் சார்பு - SPD PROCEEDINGS

ரூ.50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் அசல் ஆவணம் கட்டாயம்: வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு


மத்திய அரசு மேற்கொண்டு வரும் கருப்புப் பண ஒழிப்பு  நடவடிக்கையில் அடுத்த கட்டமாக வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களின் அசல் அடையாள ஆவணங்களையும் சரிபார்க்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜாக்டோ ஜியோ வழக்கு மதுரையில் இருந்து சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம்!!!


Sunday, October 22, 2017

தொலைதூரங்களில் RMSA பயிற்சி - பட்டதாரி ஆசிரியர்கள் அதிருப்தி 


குறைபாடுகளுடன் ஊதிய உயர்வு அரசாணை - கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் கோர்ட்டு அனுமதியுடன் போராட்டம் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு.


ஏமாற்றிவிட்டார் எடப்பாடி*” - சம்பள கமிஷன் அறிவிப்பால் கொந்தளிக்கும் அரசு ஊழியர்கள்தமிழக அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் அடுத்தடுத்து நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்து, ஏழாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ‘இனி அதிகபட்ச ஊதியம் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம், வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட பல்வேறு படிகளிலும் அதிகபட்ச உயர்வு, ஓய்வு பெறும்போது வழங்கப்படும் பணிக்கொடைக்கான உச்சவரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்வு’ எனச் சுமார் 12 லட்சம் அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இதைத் தீபாவளிப் பரிசாக நினைத்து அறிவித்தார் முதல்வர். சமூக வலைதளங்களிலும் இந்தச் சம்பள உயர்வு பற்றி கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், ‘‘இது நாங்கள் எதிர்பார்த்தது இல்லை. எங்களுக்குத் தீபாவளி தித்திக்கவில்லை’’ என்கின்றன ஊழியர் சங்கங்கள். 

Madurai Kamaraj University (DDE) B.Ed Spot Admission 2017-2019

'மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம்'


''போட்டி தேர்வுகளுக்காக, மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு, தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.

மாணவர்களின் வயது சிக்கலுக்கு தீர்வு சி.பி.எஸ்.இ., அறிவிப்பால் உற்சாகம்


மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யில் மாணவர் சேர்க்கைக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்புக்கு, சி.பி.எஸ்.இ., தீர்வை அறிவித்துள்ளது.


 சி.பி.எஸ்.இ., பள்ளிகளை பொறுத்தவரை, பல ஆண்டுகளாக வயது குழப்பம் நிலவுகிறது.  பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் போது, சம்பந்தப்பட்ட, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இடம் கொடுக்க விருப்பம் இல்லாவிட்டால், வயதை காரணம் காட்டி, மாணவர்களின் விண்ணப்பத்தை நிராகரிப்பது வழக்கமாக உள்ளது.

காலியிடங்களை நிரப்பாததால் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கல்விப்பணிகள் கடும் பாதிப்பு


தமிழகம் முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியரல்லாத காலிப்பணியிடங்களை, நிரப்ப அரசு அனுமதி வழங்காததால் கல்விப்பணிகள் கடும் பாதிப்படைந்துள்ளன. 


 தமிழகத்தில் சுமார் 8,395 அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. அரசுப்பள்ளிகளை போன்றே அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இளநிலை உதவியாளர், எழுத்தர், அலுவலக உதவியாளர், காவலர் உள்ளிட்ட ஆசிரியரல்லாத பணியிடங்கள் உள்ளன.

FLASH NEWS : TN 7th PC - ELEMENTARY EDUCATION - PAY FIXATION OPTION FORM

Saturday, October 21, 2017

TN 7th PAY - New Fixation Form as per G.O 303 & Model Form (Empty)

PAY FIXATION FORM FOR 7th PAY COMISSION AS PER G.O 303- APPENDIX - II STATEMENT OF FIXATION OF PAY UNDER TAMIL NADU REVISED SCALES OF PAY RULES, 2017 ஜாக்டோ-ஜியோ வழக்கு 23.10.17 அன்று நீதிமன்றத்தின் பட்டியலில் வரவில்லை.


JACTTO - GEO வழக்கு 24.10.17 அன்று விசாரணைக்கு வருகிறது.
*ஜாக்டோ-ஜியோ வழக்கு சில நிர்வாக காரணங்களால் 23.10.17 அன்று நீதிமன்றத்தின் பட்டியலில் வரவில்லை.


 எனவே 24.10.17 அன்று நடைபெற உள்ள  உயர்்மட்டக்குழு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. அடுத்த கூட்டம் திங்கள் கிழமை பிற்பகல் தெரிவிக்கப்படும். ஜாக்டோ-ஜியோ .

TN 7th PAY - New Fixation Form as per G.O 303 & Model Form (Filled)

7th Pay Fixation - Tamil Form


ஏழாவது ஊதியக்குழு - ஊதிய நிர்ணயம் செய்தலுக்கான படிவம் ( தமிழில் )

TN 7 The Pay commission Latest Calculator | VERSION 7.3 - NEW VERSION FOR PROMOTION AND ALL ALLOWANCES


  Special features:

1. Entry page  is  separately now
2. Simplified for user friendly.
3. You can now two incentives are calculate  yearwise.
4.old CCA,PP are automatically calculated.

வாக்காளர் சேர்ப்பு: நாளை சிறப்பு முகாம்

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் நாளை வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர்  சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய விரும்புவோர் அதற்கான படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம்.

தொடக்கப் பள்ளிகளில், மாணவர்கள் இன்றி, உபரியாக இருக்கும் ஆசிரியர்களை கண்டறிவதற்கான ஆலோசனை கூட்டம், அக்., 23-30 வரை, சென்னையில் நடக்கிறது.

தமிழகத்தில், 24 ஆயிரம்தொடக்கப் பள்ளிகளில், மாணவர்கள் இன்றி, உபரியாக இருக்கும் ஆசிரியர்களை கண்டறிவதற்கான ஆலோசனை கூட்டம்,  அக்., 23-30 வரை, சென்னையில் நடக்கிறது.

10 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளின் உள்ள ஆசிரியர்கள் பட்டியல் சேகரிக்க உத்தரவு.

23ம் தேதி முதல் ஆலோசனை துவக்கம் தொடக்கப் பள்ளிகளில், மாணவர்கள் இன்றி, உபரியாக இருக்கும் ஆசிரியர்களை கண்டறிவதற்கான ஆலோசனை கூட்டம், அக்., 23-30 வரை, சென்னையில் நடக்கிறது.

  தமிழகத்தில், 24 ஆயிரம் அரசு தொடக்கப் பள்ளிகளில், 63 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்; 15 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். ௨௩ மாணவர்களுக்கு, ஓர் ஆசிரியர் என, உள்ளனர். ஆனால், மத்திய அரசு விதிகளின்படி, ௩௫ மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என, 43 ஆயிரம் ஆசிரியர்கள் இருந்தால் போதும். தற்போது, இப்பள்ளிகளில் கூடுதலாக, 20 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர்.

பள்ளி பாடத்திட்டம் மாற்றம் : கருத்து கூற, 'ஆன் - லைன்' வசதி?

'பள்ளி பாடத்திட்டம் குறித்து, தனியார் பள்ளிகள் கருத்து தெரிவிக்க, இணையதள வசதி ஏற்படுத்த வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில், 14 ஆண்டு களாக, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம் மாற்றப்படவில்லை. 

அக்., 23 முதல் சிறப்பு வகுப்பு : சுண்டல், பிஸ்கட் உண்டு

அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளிலும், பொதுத் தேர்வு மாணவர்களுக்கு, அடுத்த வாரம் முதல், சிறப்பு வகுப்புகள் துவக்கப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள,87 ஆயிரம் பள்ளிகளில், ௪௭ லட்சம் மாணவ - மாணவியர் படிக்கின்றனர். 

SWACHH BHARAT VIDYALAYA AWARD- 39 கேள்விகள் தமிழில்


3ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்: ரூ.60 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் 3ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்க தமிழக அரசு ரூ.60 கோடி ஒதுக்கியுள்ளது. அடுத்த மாதம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்  என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 770 பள்ளிகள் மற்றும் 11 வட்டாரங்களில் அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் முதற்கட்டமாக கடந்த ஆண்டு மெய்ந்நிகர் வகுப்பறை என்னும் ஸ்மார்ட் கிளாஸ்கள் தொடங்கப்பட்டன.

இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதியத்தியதை மாற்றி முறையான அறிவிப்பு வெளிவராத பட்சத்தில் அடுத்தக்கட்ட போராட்டம் மிக வலுவானதாக அமையும்-ஜாக்டோ ஜியோ அறிவிப்பு .

Friday, October 20, 2017

ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்; தனியார் பள்ளிக்கு நீதிமன்றம் உத்தரவு

chennai high court

மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுத்த ராசிபுரம் பள்ளிக்கு 1 லட்சம் ரூபாய் பாதிக்கப்பட்ட மாணவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊதியக்குழுவில் தீர்க்கப்படாத குழப்பங்கள்

1. இடைநிலை ஆசிரியர் 750 PP க்கு increment calculationக்கு சேருமா,சேராதா?

2. சேராது எனில் இடையில் பதவி உயர்வுக்கு அதனை எவ்வாறு சேர்ப்பது.

3) பதவி உயர்வுக்கு எவ்வாறு நி ர்ணயம் செயவது

4.) இடைநிலை ஆசிரியர்கள் பெற்று வரும் special Allowance ரூ .500
என்னானது.

Mother Teresa Womens's University-ல் தொலைதூர கல்வியில் பி.எட் படிக்கும் ஆசிரியர்கள் நடுநிலைப் பள்ளி ,உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மட்டுமே கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்

G.O.(Ms) No.294 Dt: October 16, 2017 -கல்லூரிக் கல்வி- தமிழகத்தில் செயல்பட்டு வரும் 68 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் - உள்கட்டமைப்பு வசதிகளை ரூ.210.00 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்த, நிர்வாக அனுமதியும் 2017-18 ஆம் நிதியாண்டுக்கு ரூ.105.39 கோடி மற்றும் 2018-19-ஆம் நிதியாண்டுக்கு ரூ.104.61 கோடி நிதி ஒப்பளிப்பும் அனுமதித்து-ஆணைகள் வெளியிடப்படுகிறது

CLICK HERE-G.O 294 DATE 16.10.2017-

TN 7TH PAY COMMISSION புதிய ஊதியம் நவம்பர் மாதமே வழங்கப்படும்.

TN 7th Pay Commission புதிய ஊதியம் நவம்பர் மாதமே வழங்கப்படும்

7th pay commission will be update on epay website in November salary bill only

அரசு விழாவில் பங்கேற்க மாணவர்களுக்கு கட்டுப்பாடு

அரசு விழாக்களுக்கு, பள்ளி மாணவர்களை அழைத்து செல்வதற்கு, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.அரசு விழாக்களில் மாணவர்களை பங்கேற்க உயர்நீதிமன்றம் தடை விதித்தது. 

'நெட்' தேர்வு: ஹால் டிக்கெட் 

பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின், 'நெட்' தகுதி தேர்வுக்கு, ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. முதுநிலை பட்டதாரி மற்றும் ஆராய்ச்சி படிப்பு முடித்தவர்கள், கல்லுாரி, பல்கலைகளில் உதவி பேராசிரியராக சேர, 'நெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

சரியான நேரத்தில் எச்சரித்து உயிரைக் காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்!


heart-rate-apple-watch

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பே, இதயம் வேகமாக துடிப்பதை எச்சரித்தால் ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

'நீட்' தேர்வு பயிற்சி: பதிவு எப்படி?


'நீட்' தேர்வுக்கான அரசின் சிறப்பு பயிற்சிக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் வழிகாட்டுதல் வழங்கி உள்ளார்.

3,௦௦௦ ஆசிரியர்கள்

'நீட்' தேர்வால், தமிழக அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளதாக, கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில், தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' நுழைவு தேர்வுக்கான சிறப்பு பயிற்சியை, பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்து உள்ளது. 
இந்த பயிற்சி, நவம்பரில் துவங்கப்பட உள்ளது. இதற்காக, 3,௦௦௦ ஆசிரியர்கள், ஆந்திராவில் உள்ள நுழைவு தேர்வுக்கான சிறப்பு அகாடமியில், சிறப்பு பயிற்சி பெறுகின்றனர்.

பொது தேர்வு எழுதுவோருக்கு இரண்டு அரையாண்டு தேர்வு


தமிழக அரசு பள்ளி மாணவர்கள், பொது தேர்வில் அதிகம் தேர்ச்சி பெறும் வகையில், சிறப்பு கவனம் செலுத்தும்படி, அதிகாரிகளுக்கு, அமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தி உள்ளார். இதையொட்டி, பொது தேர்வு எழுத உள்ளவர்களுக்கு, சனி, ஞாயிறுகளில், மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. 

Thursday, October 19, 2017

32 மாவட்டங்களில் நாளை Jactto - Geo கூட்டம்.


31 தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரியாக, பதவி உயர்வு அளித்து, ஆணை


பிளஸ் 2மாணவர்களுக்கான, நுழைவு தேர்வு பயிற்சிக்கு, நேற்று முதல், 'ஆன்லைன்' பதிவு துவங்கியது; வரும், 26ம் தேதி வரை பதிவு செய்யலாம். தமிழக பள்ளிக் கல்வி துறையின், ஒருங்கிணைந்த புதிய இணைய தளத்தின் செயல்பாட்டை, பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன், துவங்கி வைத்தார்.

2016 ம் ஆண்டு நிலவரப்படிதமிழகத்தின் அனைத்து வகை பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்கள் விவரம்!!

புதுக்கோட்டை மாவட்டம் : RMSA ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட பணியிடைப் பயிற்சி IEDSS AND GENDER SENSITIZATION ஆகிய பொருட்களில் மூன்று நாட்கள் நடைபெறும் நாட்கள் மற்றும் பயிற்சி நடைபெறும் இடங்கள் சார்ந்து புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்.

விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்!

புதிய ஊதியக்குழுவின் படி ஓய்வூதியர்களுக்கான ஊதியம் நிர்ணயம் வெளியீடு


CLICK HERE-PENSIONER PAY TABLE

Wednesday, October 18, 2017

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் 

கூகுள் பிளே ஸ்டோரில் அறிமுகமாகியுள்ள கூகுள் அசிஸ்டெண்ட் செயலி 

எச்சரிக்கை : அடோப் பிளாஷ் ப்ளேயர் பயன்படுத்துபவரா நீங்கள்.? உஷார்.!


அடோப் பிளாஷ் ப்ளேயர் பயன்படுத்துபவரா நீங்கள்.? உஷார்.!

சர்வதேச குழந்தைகள் அமைதிக்கான விருது!-தமிழக ஏழாம்வகுப்பு மாணவர் பெயர் பரிந்துரை


ஐ.நா வழங்கும் சர்வதேச குழந்தைகள் அமைதிக்கான விருதுக்குத் தமிழத்தில் இருந்து நரிகுறவர் இனத்தைச் சேர்ந்த மாணவர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

போராட்டத்துக்கு ஆயத்தமாகும் அரசு ஊழியர்கள்!!!


தமிழக அரசு ஊழியர்கள், பல கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் செய்வதற்கு மாநிலம் முழுவதும் ஆயத்தமாகிவருகிறார்கள். தமிழக அரசு ஊழியர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது, எட்டாவது ஊதியக் குழு மாற்றத்தை அமல்படுத்துவது என 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்டம்பர் 7 முதல், 15 வரையில் தொடர் போராட்டம் செய்தார்கள் ஜாக்டோ ஜியோ அமைப்பினர். 

21 மாத சம்பளக்குழு நிலுவைத்தொகை : அரசு பணியாளர் சங்கம் வலியுறுத்தல்


 ''21 மாத சம்பளக்குழு நிலுவைத்தொகையை முழுவதுமாக வழங்க முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, அரசு பணியாளர் சங்கம் வலியுறுத்தியுளளது.


 மதுரையில் சங்க மாநில தலைவர் உ.மா.செல்வராஜ் கூறியதாவது:
சம்பளக்குழு முடிவுகள் 12 லட்சம் அரசு பணியாளர்கள், ஏழு லட்சம் ஓய்வூதியர்களுக்கு ஏமாற்றம் தருகிறது. மூன்று மாத போராட்டங்களுக்கு பின் அரசு, ஜாக்டோ ஜியோ கிராப் கூட்டமைப்பிடம் பேசி ஒப்புக் கொண்டபடி சம்பளக்குழு அறிக்கையை பெற்று அமல்படுத்தியது வரவேற்கத்தக்கது.

பள்ளி மாணவர்களுக்கு அஞ்சல்தலை வடிவமைப்பு போட்டி


குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அஞ்சல் தலை வடிவமைக்கும் போட்டியை அஞ்சல்  துறை நடத்துகிறது. வடிவமைக்கும் அஞ்சல் தலை மாதிரிகளை  அனுப்ப அக்.20ம் தேதி கடைசி நாள். 

10ம் வகுப்பு சான்றிதழ்கள் அழிக்க அரசு முடிவு


அரசு தேர்வுத் துறையில், 2008 முதல்,2012 வரை, 10ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களுக்கான சான்றிதழ் பெற, 15நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசு தேர்வுத்துறையின், சென்னை மண்டல துணை இயக்குனர், ராஜலட்சுமி அறிவிப்பு:

பள்ளிகளில் மின் விபத்து அபாயம் : மழைக்கு முன் சரி செய்ய உத்தரவு


வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ளதால், விபத்துகளை தடுக்க, மின் ஊழியர்கள் வாயிலாக, முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில், அடுத்த சில நாட்களில், வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ளது. இந்த காலத்தில், பெரும்பாலும், மின் கசிவால் உயிரிழப்புகள் ஏற்படும்.